இந்த வார விசேஷங்கள்: 17-9-2024 முதல் 23-9-2024 வரை
திருப்பதி திருமலையில் நாளை மறுநாள் ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.;
17-ந்தேதி (செவ்வாய்)
* பவுர்ணமி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
18-ந்தேதி (புதன்)
* மகாளயம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
19-ந்தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான், மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
20-ந்தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (சனி)
சங்கடகர சதுர்த்தி.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (ஞாயிறு)
* கார்த்திகை விரதம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (திங்கள்)
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.