கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. முன்னணி தெலுங்கு நடிகரை காதலிப்பதாகவும் பேசினர். இதையெல்லாம் அவரது பெற்றோர் மறுத்தனர். இதற்கிடையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய கீர்த்தி சுரேஷ், திருமணம் குறித்த கேள்விக்கு, 'இங்கிலீஸ்காரன்' படத்தில் வடிவேல் ஒன்றுமில்லை என்று காட்டுவது போல 'கார்ட்டூன்' போட்டிருக்கிறார். இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை சூசகமாக உணர்த்தி விட்டாராம்.