என் இருண்ட இடைவெளியில் இருந்து விடுதலை - இயக்குனர் சுதா கொங்கரா
இயக்குனர் சுதா கொங்கரா 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டது.;
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.
தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் "சிறந்த வலி. சிறந்த எரிச்சலூட்டும்! ஒரு மாத இடைவெளியில்! இது நான் விரும்பிய இடைவேளை அல்ல" என்று ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் இருண்ட இடைவெளியில் இருந்து விடுதலை.என் நண்பனின் "கடைசி நாள்" படப்பிடிப்பு! " என்று குறிப்பிட்டுள்ளார்.