இயக்குனர் அட்லியும், நடிகை பிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனாலும் குழந்தையின் பெயரை அறிவிக்காமலேயே இருந்தனர். தற்போது குழந்தைக்கு மீர் என பெயர் வைத்து இருப்பதாக வலைத்தளத்தில் அட்லி-பிரியா அறிவித்துள்ளனர். திரையுலகினர், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.