சினிமா துளிகள்

ஒளிப்பதிவாளரை பிரிந்த கதாநாயகி! சிறந்த நடிப்புக்காக இந்த வருடம் தேசிய விருது பெற்ற மலையாள கதாநாயகி,;

Update: 2017-07-18 06:54 GMT
3 வருடங்களுக்கு முன் ஒளிப்பதிவாளர் ஒருவரை காதல் திருமணம் செய்தார். மூன்றே வருடங்களில் அவருடைய திருமண வாழ்க்கை கசந்து போனது.

அதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பேசி, பிரிவதாக அந்த நடிகை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்!

“அவர் எனக்கு அண்ணன் மாதிரி..!”

பேய் வேடத்தில் நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமான அந்த இரட்டை பெயர் கொண்ட நடிகை, திரையுலகுக்கு புதுசாக அறிமுகமாகி இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் பின்னால் சுற்றி வருகிறார்.

“உனக்கு அவர் மீது காதலா?” என்று விசாரிக்கும் சக நடிகர்-நடிகைகளிடம், “அவரை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு அண்ணன் மாதிரி” என்று சிரித்தபடி பதில் அளிக்கிறார், இரட்டை பெயர் கொண்ட நடிகை!

மேலும் செய்திகள்