மனைவியை விவாகரத்து செய்யும் கன்னட சூப்பர் ஸ்டார் பேரன்

ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் நடிகர் யுவராஜ்குமார், தனது மனைவியை விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update:2024-06-11 08:07 IST

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனித் ராஜ்குமார். இதில் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். புனித் ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார்.

ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் யுவராஜ்குமார். இவரும் கன்னட திரையுலகில் இளம் நடிகர் ஆவார். இவரது மனைவி ஸ்ரீதேவி. மைசூருவை சேர்ந்த ஸ்ரீதேவியும், யுவராஜ்குமாரும் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக இவர்களது விவாகரத்து குறித்த செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இருவரும் ஒன்றாக வாழவில்லை என்ற தகவல்களும் வெளி வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், ஸ்ரீதேவியும், யுவராஜ்குமாரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 6-ந்தேதி யுவராஜ்குமார் பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி நடக்க உள்ளது. ஸ்ரீதேவி தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கும் விவாகரத்து நோட்டீஸ் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்