18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் நடிக்கும் திருப்பாச்சி பட நடிகர்

18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் யுகேந்திரன் நடிக்கிறார்.

Update: 2024-04-09 05:35 GMT

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறார் விஜய். இந்தப் புகைப்படத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், கோட் படத்தில் நடிகர் யுகேந்திரன் இணைந்துள்ளார். இது குறித்தான புகைப்படம் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்யுடன் யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதன் மூலம் 18 வருடங்களுக்கு பிறகு யுகேந்திரன், விஜய் படத்தில் நடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்