இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்று என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

Update: 2024-04-18 09:12 GMT

சென்னை,

தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் எல்லோரும் தவறாது வாக்களிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், ''வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவே வாக்களிக்க தகுதி உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.

அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்''என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர் ரகுமானின் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதிவு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்