ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.;

Update: 2022-10-12 16:36 GMT

சென்னை,

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடித்து வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி இருவரும் தங்கள் பிறந்தநாளை கொண்டாடினர். படக்குழுவினர் இருவரின் பிறந்தநாளை செட்டில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த நிலையில் இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'ஏழு கடல் ஏழு மலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்