சென்சார் செய்யப்படாத காட்சிகளுடன்... ஓடிடியில் வெளியாகிறது 'அனிமல்' திரைப்படம்
'அனிமல்' திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை,
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
திரையரங்க வெளியீட்டின் போது சென்சாரில் நீக்கப்பட்ட சுமார் 8 நிமிட காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் பதிப்பில் இடம்பெறும் என படத்தின் இயக்குனர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி ஓடிடியில் வெளியாகும் அனிமல் திரைப்படத்தின் மொத்த நீளம் (RUN TIME) 3 மணிநேரம் 30 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்கில் வெளியான போது படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.