விஜய் அரசியலுக்கு வருவாரா ? தாயார் ஷோபா சொன்ன புதிய தகவல்

விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.

Update: 2022-12-27 13:50 GMT

சென்னை,

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;

எல்லாரும் நல்ல இருக்கணும்'னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன். காமாட்சி அம்மனின் தரிசனம் பார்த்தேன். விஜய் படம் நல்ல இருக்கணும்'னு வேண்டிக்கங்க எல்லாரும்" என்றார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு ,

விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதான். கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான். அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்