நடிப்புக்கு ஏன் முக்கியத்துவம்? - ஹிப் ஹாப் ஆதி
இசையமைப்பதை விட, நடிப்பதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஹிப் ஹாப் ஆதி கூறுகிறார்.
தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை, கத்தி சண்டை, கவண், இமைக்காத நொடிகள் உள்பட 8 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.
அவர் இப்போது ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், 'வீரன்' என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படத்துக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார். உடல் மெலிவுக்காக அவர் தினமும் குதிரை சவாரி செய்கிறார். சென்னை மெரினா கடற்கரையில், தினமும் காலை ஒரு மணி நேரம் குதிரை ஓட்டுகிறார். இதன் விளைவாக அவர் கணிசமாக மெலிந்து காணப்படுகிறார்.
இசையமைப்பதை விட, நடிப்பதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் கூறுகிறார்.