விஜய் படத்துக்கு ஆங்கில தலைப்பு ஏன்? - வெங்கட் பிரபு விளக்கம்

விஜய் படத்துக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டது ஏன் என்பதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.

Update: 2024-08-20 06:03 GMT

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் படம் பற்றி வெங்கட் பிரபு கூறும் போது, 'ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது படத்துக்காக விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய 'லோலா' தொழில் நுட்ப நிறுவனம் இந்த படத்தில் பணியாற்றி உள்ளது. இந்த படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது பான் இந்தியா படமாக இருப்பதால், இப்படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார். மேலும் இது அரசியல் படமல்ல என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்