சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தது ஏன்? நடிகை பாவனா பதில்

நடிகை பாவனா தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.;

Update: 2024-05-06 10:31 GMT

சென்னை,

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பாவனா தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு எதிராக சிலர் தவறான வதந்திகள் பரப்புவதாக குற்றம் சாட்டி உள்ளார்

இதுகுறித்து பாவனா அளித்துள்ள பேட்டியில், என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தன.வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பினார்கள். சிலருடன் இணைத்தும் பேசினார்கள். இது போதாது என்று சிலர் நான் உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக வதந்திகளை உருவாக்கினார்கள். என்னை மோசமான பெண்ணாக சித்தரிக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார்கள் என்று கூறி கண்கலங்கினார்.

மேலும் பாவனா கூறும்போது, எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியே வர சில காலம் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன் என்றார். பாவனா தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்