விஜய் ஆண்டனிக்கு என்ன பிரச்சினை?
விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி உள்ளது.;
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்ததுடன், நல்ல வசூலும் பார்த்துள்ளன. தற்போது கொலை, ரத்தம், வள்ளிமயில், தமிழரசன், அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி உள்ளது. அதில் "உங்க குடும்பத்துல ஏதாவது பிரச்சினைன்னா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க" என அறிவுரை கூறியுள்ளார். எதற்காக இந்த பதிவை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார். யாரேனும் சமரசம் செய்து வைப்பதாக அவரது பிரச்சினைக்குள் புகுந்து சிக்கலை ஏற்படுத்தி காயப்படுத்தினார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் ஆண்டனியின் இந்த பதிவு வைரலாகிறது.