என்ஜினீயரிங் என்ன நம்ம குலத் தொழிலா..? கவனம் ஈர்க்கும் 'சிங்கப்பூர் சலூன்' டிரைலர்..!

'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2024-01-18 08:28 GMT

சென்னை,

'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். "முடி வெட்டுவது எல்லாம் குலத் தொழில்... நமக்கு எப்படி செட் ஆகும்?" என்று தலைவாசல் விஜய் கேட்கும் கேள்விக்கு, "என்ஜினீயரிங் என்ன நம்ம குலத் தொழிலா?" என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் வசனம் கவனிக்க வைக்கிறது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்