வைரலாகும் புகைப்படம்... நடிகையுடன் மீண்டும் காதலில் நாக சைதன்யா
நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.;
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 7 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இருவரையும் சமரசப்படுத்தி சேர்த்து வைக்க சில பிரபலங்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து இருவரும் தீவிரமாக படங்களில் நடித்தனர். இந்த நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இதனை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சோபிதா துலிபாலா நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.