வைரலாகும் புகைப்படம்: கவுதமி மகள் சினிமாவில் நடிக்க வருகிறாரா?

தாய் கவுதமியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை மகள் சுப்புலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.;

Update:2022-12-08 09:51 IST

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கவுதமி. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். கவுதமிக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். சுப்புலட்சுமிக்கு தற்போது 23 வயது ஆகிறது. இதுவரை ஊடக வெளிச்சத்துக்கு வராமல் இருந்த சுப்புலட்சுமி இப்போது சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இயங்க ஆரம்பித்துள்ளார். தாய் கவுதமியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சுப்புலட்சுமி நடிக்க வருகிறாரா? என்று கேள்வி எழுப்பி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். சுப்புலட்சுமி புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாகவும், அதனாலேயே தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளன. ஆனாலும் சுப்புலட்சுமி நடிப்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்