விமல் நடித்த `போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள `போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-08 14:16 GMT

சென்னை,

விமல் நடிக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' பர்ஸ்ட்-லுக் வெளியானது. பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்தவர் நடிகர் விமல். தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. விமல் நடித்த 'வாகை சூடவா' திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளது.

கிட்டதட்ட 3 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த விமல், அதன் பிறகு வெப் சீரிசிலும் நடித்தார். இதற்கிடையில் நடிகர் விமல், போஸ் வெங்கட் இயக்கும் `சார்' எனும் படத்திலும் நடித்துள்ளார்.

இதனையடுத்து, விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் `போகுமிடம் வெகுதூரமில்லை' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பலர் நடித்துள்ளனர்.

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு புது போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்