நடிகர் விக்ரம் உடல்நிலை சீராக இருக்கிறது : மருத்துவமனை அறிக்கை

நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Update: 2022-07-08 14:02 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

''நெஞ்சு வலி காரணமாக நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவ குழு உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு இல்லை, தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்