'எலக்சன்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
உறியடி விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'எலக்சன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார்.
'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் அரசியலை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலக்சன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
ஆதித்யா இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், எலக்சன் திரைப்படம் வரும் மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.