டுவிட்டர் பதிவில் கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த விஜய் ஆண்டனி டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பரபரப்பான பதிவுகளை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.

Update: 2022-10-21 06:45 GMT

சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ள பாருங்கள் என்றும், அடுத்தவனை கூப்பிட்டால் கும்மி அடித்து கதையை முடிச்சிருவான் என்றும் பதிவிட்டார்.

தொடர்ந்து ரெயிலில் மாணவியை தள்ளி கொலை செய்த சம்பவம் குறித்து வெளியிட்ட பதிவில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரெயில்ல தள்ளிவிட்டு தண்டிக்கும்படி, சத்யாவின் சார்பாக பொதுமக்களில் ஒருவனாக நீதிபதி அவர்களை கேட்டு கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில் "கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி, மதம், கோவில், சாமியார் எல்லோரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிச்சிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, ரிக்கொஸ்ட்டா கேப்பேன். நீங்க என்ன கேப்பீங்க?" என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்