விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2022-08-17 11:16 GMT

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் 'கொலை' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

பிரபல மாடல் ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி எடுக்கும் முயற்சிகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்