மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.;

Update: 2023-10-09 00:53 GMT

சென்னை,

சமீபகாலமாக சினிமா இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஏ.ஆர்.ரகுமான் நடத்தினார். இந்த மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அனிருத், யுவன்சங்கர் ராஜா, வித்யாசாகர், தேவா ஆகியோர் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி மீண்டும் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

அந்த வகையில் கோவையில் டிசம்பர் 2-ம் தேதியும், பெங்களூருவில் டிசம்பர் 16-ம் தேதியும், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31-ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடம் நேரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்