விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடித்துள்ள 'அக்னிச் சிறகுகள்' படத்தின் டீசர் வெளியீடு..!

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-29 11:25 GMT

சென்னை,

'மூடர்கூடம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் 'அக்னிச் சிறகுகள்'. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அக்சரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். அதிரடி ஆக்சன் காட்சிகளும் வசனங்களும் நிறைந்த டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்திற்கு கே.ஏ. பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்