'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.;

Update:2024-07-17 12:23 IST

சென்னை,

விடுதலை படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் இப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் "உயிர்ப்ப ஊரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்" என்ற திருக்குறள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்