அஜித்தின் கார் சாகசம்... 'விடாமுயற்சி' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2024-04-04 08:36 GMT

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், 'துணிவு' படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் 'விடாமுயற்சி' படத்தின் கார் சேஸிங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் காட்சிப்படி, அதிவேகமாக செல்லும்போது கார் கவிழும் வகையில் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அஜித்துடன் நடிகர் ஆரவ் இடம்பெற்றுள்ளார். இந்த காட்சிகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்