விக்கி கவுசலின் 'பேட் நியூஸ்' முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விக்கி கவுசல் மற்றும் திரிப்தி டிம்ரி நடித்துள்ள 'பேட் நியூஸ்' படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.;
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பின் கணவர் ஆவார். நடிகர் விக்கி கவுசல் தற்போது 'பேட் நியூஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை, பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக விக்கி கவுசல் நடித்திருந்த 'லவ் பேர் ஸ்கொயர் பீட்' படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். அனிமல் படத்தில் நடித்துள்ள திரிப்தி டிம்ரி 'பேட் நியூஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை நேஹா தூபியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நகைச்சுவை படத்தில் விக்கி கௌசல், அமி விர்க் என இரண்டு கதாநாயகர்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் திரிப்தி டிம்ரி இரண்டு ஆண்களால் கர்ப்பமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ 8.62 கோடியை ஈட்டியுள்ளதாக தர்மா புரொடக்சன் படக்குழு தனது எக்ஸ் தளபக்கத்தில் அறிவித்துள்ளது.