வசூல் சாதனை படைத்த 'வேட்டையன்' திரைப்படம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

‘வேட்டையன்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-10-14 13:46 GMT

சென்னை,

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படம் கடந்த 10-ந் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசுகிறது.

இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இந்தியளவில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. தற்போது, மழை காரணங்களால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வேட்டையன் வெளியான திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுகள் வெறிச்சோடியபடி இருக்கின்றன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்