ரஜினியை இயக்கும் வாய்ப்பு நெல்சனால் கைநழுவியது - இயக்குனர் வெங்கட் பிரபு
ரஜினியை வைத்து படம் இயக்கவிருந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கைநழுவி போன அந்த சம்பவம் குறித்து வெங்கட் பிரபு பேசியது வைரலாகி வருகிறது.;
சென்னை,
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, முதல் படத்தை இளைஞர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி பெற்றார். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்றவராக மாறிவிட்டார் வெங்கட் பிரபு. மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த 'சிவகாசி' படத்தில் வெங்கட் பிரபு நடித்துள்ளார்.
இந்த நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்க கிடைத்த வாய்ப்பு கைநழுவியது குறித்து வெங்கட் பிரபு பேசிய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாருக்கு நான் ஒரு கதையை கூறினேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. எனவே ரஜினியை இயக்குவது உறுதிதான் என்று நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நெல்சன் பெற்றுவிட்டார். அந்த வாய்ப்பு எனக்கு மிஸ்ஸானது அப்செட்தான் என்றாலும் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி" என்றார்.
கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.