'வாரிசு' படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பகிர வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் கோரிக்கை

'வாரிசு' படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2022-08-24 08:04 IST

சென்னை,

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளி விட்டு சண்டைபோடும் காட்சிகள் வெளியானது.

சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எதையும் பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 'வாரிசு' படத்தில் இருந்து கசிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எதையும் பகிர வேண்டாம்' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்