'வாரிசு' கொண்டாட்டம்..! நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி - இயக்குநர் வம்சி நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் 'வாரிசு' படத்தின் இயக்குநர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு சந்தித்துள்ளனர்

Update: 2023-01-11 15:38 GMT

சென்னை,

'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.

வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கமர்ஷியல் திரைப்படம். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் 'வாரிசு' படத்தின் இயக்குநர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு சந்தித்துள்ளனர்.

இது குறித்து வம்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

'வாரிசு' கொண்டாட்டம்.. நண்பா, நண்பி நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி . உங்கள் நம்பிக்கைக்கு. நன்றி விஜய் சார். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்