வெளியீட்டிற்குப் பிறகு சில காட்சிகள் நீக்கம் செய்யப்பட்ட தமிழ் படங்கள்
வெளியீட்டிற்குப் பிறகு சில தமிழ் படங்களின் சில காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.;
சென்னை,
சினிமாவில் வெளியான பிறகு சில படங்களின் சில நிமிட காட்சிகள் ரசிகர்களை போதுமான அளவு ஈர்க்காததால் நீக்கம் செய்யப்படுகின்றன. அதன்படி, வெளியீட்டிற்குப் பிறகு சில தமிழ் படங்களின் சில காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.
அந்த படங்கள் பின்வருமாறு:-
1.தேவ்
கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் 2 மணி 30 நிமிடங்கள் நீளம் கொண்டிருந்தது. பின்னர் ரசிகர்களின் கருத்தால் 15 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டன.
2. யானை
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது இப்படம். 2 மணி 36 நிமிடங்கள் நீளம் கொண்ட இப்படம் கலவையான விமர்சனத்தால் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டன.
3. கோப்ரா
விக்ரம் நடிப்பில் ஞானமுத்து இயக்கிய இப்படம் 3 மணி நேரம் நீளம் கொண்டிருந்தது. பின்னர் ரசிகர்களை ஈர்க்க 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன.
4. இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இப்படம் 3 மணி 5 விநாடி நீளம் கொண்டிருந்தது. பின்னர் விமர்சனங்களால் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன.
5. வலிமை
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2 மணி 58 நிமிடம் நீளத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீக்கப்பட்டன.