3 படங்களில் வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் தடை காரணமாக 5 வருடங்களாக திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சமீபத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தற்போது 3 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

Update: 2022-10-15 02:45 GMT

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலுவின் கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, வீரபாகு, வண்டு முருகன், ஸ்நேக் பாபு, புலிகேசி, வெடிமுத்து, அலார்ட் ஆறுமுகம், நாய் சேகர், சூனா பானா போன்ற கதாபாத்திரங்களை மறந்துவிட முடியாது. ஆணியே புடுங்க வேண்டாம். இப்பவே கண்ண கட்டுதே, கிறுக்கன் ஆக்கிருவாங்க போல இருக்கு, டூ வாட் ஐ சே, லேடன் பின் லேடன் என்றெல்லாம் அவர் பேசிய வசனங்களும் வயிற்றை புண்ணாக்கின. அப்படிப்பட்ட வடிவேலுவை தயாரிப்பாளர் சங்கத்தின் தடை காரணமாக 5 வருடங்களாக திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் வடிவேல் மீம்ஸ் மயமாகவே இருந்தது. சமீபத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டும் இரண்டாவது ரவுண்டை தொடங்கினார். உதயநிதியுடன் மாமன்னன், லாரன்சின் சந்திரமுகி 2-ம் பாகம் படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது விஜய்சேதுபதியின் புதிய படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்