பத்ம விருதுகள் வழங்கும் விழா - பாடகி உஷா உதூப்புக்கு பத்ம பூஷன் விருது
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்ளதுறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் , 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கலைப் பிரிவில் பிரபல பாடகி உஷா உதுப்புக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார். மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
பஜன் பாடகர் கலுராம் பமானியா, வங்கதேச பாடகி ரெஸ்வானா சவுத்ரி பன்யா மற்றும் கோபிநாத் ஸ்வைன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பரதநாட்டிய நடனக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.