'உறியடி' விஜய் குமார் நடித்துள்ள 'எலக்சன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
'எலக்சன்' திரைப்படம் வருகிற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;
சென்னை,
'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜய் குமார் தற்போது 'எலக்சன்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார். 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படம் அரசியலை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் 'எலக்சன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'மன்னவன்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'எலக்சன்' திரைப்படம் வருகிற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.