'96' படத்தின் 2-ம் பாகம் குறித்த அப்டேட்

இயக்குனர் பிரேம் குமார் '96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.;

Update:2024-09-26 12:37 IST
96 படத்தின் 2-ம் பாகம் குறித்த அப்டேட்

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது, இயக்குனர் பிரேம் குமார் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், 'மெய்யழகன்' படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின் போது இயக்குனர் பிரேம்குமாரிடம் '96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் " 96 படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டு உருவானது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்சினையை மையாக கொண்டு உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்