'இந்த நேரத்தில் ஊரில் இல்லாதது வருத்தம்...' - திரிஷா வெளியிட்ட வீடியோ

சென்னையில் இருக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-08 16:11 GMT

நியூயார்க்,

இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள 'தி ரோட்' திரைப்படம், கடந்த 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே நடிகை திரிஷா தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக நியூயார்க் சென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது திரைப்படம் வெளியான சமயத்தில் ஊரில் இல்லாதது வருத்தமளிப்பதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "உங்கள் அன்பை இங்கு வரை நான் உணர்கிறேன். படம் வெளியான சமயத்தில் என்னால் சென்னையில் இருக்க முடியாதது வருத்தமளிக்கிறது. படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்