கமல்ஹாசனின் 'விக்ரம்'படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

'விக்ரம்' படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

Update: 2022-05-26 17:00 GMT

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது.இந்த படத்தின் டிரைலர் ,மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் 'விக்ரம்' படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .இதனை படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்