ஷாருக்கான், அமீர்கான் இல்லை...ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

தென்னிந்திய சூப்பர் ஸ்டார், ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.

Update: 2024-08-12 00:00 GMT

சென்னை,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிய சினிமாவின் அதிகார மையம் ஹாங்காங்கில் இருந்தது. புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சான் போன்ற சூப்பர் ஸ்டார்களின் பெயர்கள்தான் இங்கிருந்து உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. பின்னர், 21ம் நூற்றாண்டில் ஷாருக்கான் மற்றும் அக்சய் குமார் போன்றவர்கள் உலக அளவில் பிரபலமடைந்ததால் அது பாலிவுட்டுக்கு ஆதரவாக மாறியது.

ஆனால் இப்போது, 72 வயதான தென்னிந்திய சூப்பர் ஸ்டார், ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை ரஜினிகாந்த்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர். ரஜினியின் 171வது படமான லோகேஷ் கனகராஜின் கூலி படத்திற்காக இவர் ரூ.280 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஜெயிலருக்காக ரஜினிகாந்த் வாங்கிய ரூ. 250 கோடி சம்பளத்தையும், 2016-ல் அமீர்கான் தங்கல் படத்திற்காக வாங்கிய ரூ.275 கோடி சம்பளத்தையும் முறியடித்திருக்கிறது. ஷாருக்கான் பதான் மற்றும் ஜவான் படங்களுக்கு தலா ரூ. 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியதாகவும், சல்மான்கான் தனது படங்களுக்கு சுமார் 100-150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்