மகளுக்கு பிறந்த நாள்: வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகள் பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'பு'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது.
'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா 'கிஸ்சிக்' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் மற்றும் டிரெயல்ர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் சுமார் 12 கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில் தனது மகள் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அல்லு அர்ஜுன் கூறியதாவது:
எனது வாழ்க்கையின் கியூட்டான மகிழ்ச்சி என்னுடைய அர்ஹாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 8 வருட தூய்மையான மகிழ்ச்சி. உன்னுடைய இருப்பு என் வாழ்க்கையை இனிப்பாகவும் அளவில்லா அன்பாலும் அதிகமான அணைப்புகளாலும் முத்தங்களாலும் நிரப்பியுள்ளது என்றார்.
மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் மனைவி ஸ்நேகா ரெட்டி புகைப்படங்களைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்:
அதில், "எனது இனிப்பான, க்யூட்டான, இரக்க குணமுள்ள, நேர்மறையான சிந்தனையுள்ள குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.