'வேட்டையன்' படத்தின் இசைவெளியீட்டு விழா - படக்குழு அறிவிப்பு
'வேட்டையன்' படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.;
சென்னை,
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளநிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை மற்றும் பிரிவியூ நிகழ்வு வரும் 20-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.