அருண் விஜய் நடிக்கும் 36-வது படத்தின் தலைப்பு வெளியானது

அருண் விஜய் நடிக்கும் 36-வது படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.;

Update:2024-04-23 20:43 IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ரெட்ட தல' என்ற டைட்டில் வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அட்டகாசமாக ஆக்சன் போஸ் கொடுத்துள்ள அருண் விஜய்யின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்யானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதும் இன்னொரு முக்கிய கேரக்டரில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்