சேரன் நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியானது
சேரன் நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.;
சென்னை,
இயக்குனரும் நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேசன்ஸ் சார்பில் ஹரிராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக்ராம் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கீழ் சாதி என்று கூறி ஒதுக்கப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அமைப்பை எதிர்த்துப் போராடுவது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.