ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Update: 2022-10-26 12:05 GMT

சென்னை,

கடந்த ஆண்டு நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குனர் ஜியோ பேபி இயக்கியிருந்த இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற அதே பெயரில் தயாராகி வருகிறது. இந்த தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர். கண்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்