'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் - படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2023-10-18 04:37 GMT

சென்னை, 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகாலை 4 மணிக்கு படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி தரமறுத்துவிட்டது. இதனையடுத்து காலை 7 மணிக்கு திரையிட அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதியளித்த படி காலை 9 மணிக்கே திரையிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டதால், இனிமேல் காட்சிகளை மாற்றுவது சிரமம் என திரையரங்க உரியமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்  படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்