'இது மட்டுமே 5 லட்சம் கோடி வியாபாரம் நடந்து இருக்கும்' - இயக்குனர் மோகன் ஜி பகிர்ந்த புகைப்படம் வைரல்...!

வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு குறித்து இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Update: 2023-12-07 02:15 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்நிலையில் வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு குறித்து இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், 'இந்த படங்கள் எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மட்டுமே 5 லட்சம் கோடி வியாபாரம் நடந்து இருக்கும்.. கடந்த 53 ஆண்டுகளில் நடந்த முறைகேடு இது..' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்