'துணிவு' படத்தின் புதிய அப்டேட் : படக்குழு அதிரடி அறிவிப்பு..! அஜித் ரசிகர்கள் உற்சாகம்
துணிவு படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
சென்னை,
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் துணிவு படத்தின் 3-வது பாடலான 'கேங்ஸ்டா' வெளியானது.
இந்த நிலையில் துணிவு படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.டிரைலர் குறித்த அறிவிப்பாக தான் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Sit tight, this is going to be big stay tuned to @zeestudiossouth #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @GokulamMovies pic.twitter.com/fn7YFQINIX
— Boney Kapoor (@BoneyKapoor) December 29, 2022