சென்னை மெட்ரோ ரெயிலில் 'தி கோட்' படத்தின் போஸ்டர்

'தி கோட்' படக்குழுவினர் புரமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-08-31 10:56 GMT

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரெய்லர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்தன. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில், 'தி கோட்' படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று ஒரு சில திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.

இதற்கிடையில், இன்னும் சில தினங்களில் படம் வெளியாக உள்ளநிலையில் 'தி கோட்' படத்தின் போஸ்டர்களை சென்னை மெட்ரோ ரெயில்களில் ஒட்டி படத்திற்கான புரமோசன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோவை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்