'டான்ஸிங் ரோஸ்' ஷபீர் நடித்துள்ள 'பர்த் மார்க்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

இந்த படத்தில் ஷபீருக்கு ஜோடியாக மிர்னா நடித்துள்ளார்.

Update: 2024-01-31 20:59 GMT

இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'பர்த் மார்க்'. இந்த திரைப்படத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிர்னா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், 'பர்த் மார்க்' திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'போர் தீருமா' என்ற பாடல் வெளியாகி உள்ளது. நவின் எழுதியுள்ள இந்த பாடலை சிபி ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்